உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சேலம்:

சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் ? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.