உள்ளூர் செய்திகள்

ஆடு திருட வந்த வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர்.அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர். இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வலசையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24), அம்மாப்பேட்டையை சேர்ந்த காஜாமைதீன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆடு திருட வந்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT