உள்ளூர் செய்திகள்

கருகிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

சேலம் அருகே வேம்படிதாளம் பகுதியில் சேலையில் தீப்பிடித்து கருகிய மூதாட்டி சிகிச்சை பலியானார். சேலம் அரசு மருத்துவமனையில் சுலோச்சனா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம்:

சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 65). இவர் கடந்த 1-ந் தேதி காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது.

இதனால் உடலில் தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சுலோச்சனா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.