உள்ளூர் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியல்

சாக்கடை கால்வாய் அமைக்க கோரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து, அவர்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

சேலம்:

சேலம் கொண்டலாம்பட்டி திவ்யா தியேட்டர் அருகே ஊத்துக்குளி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் சுமார் 15 பேர், கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து, கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு விரைந்து, அவர்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

இதை அடுத்து சாலை மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT