உள்ளூர் செய்திகள்

கொளத்தூரில் கஞ்சா விற்றவர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கருங்கலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கொளத்தூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.கருங்கல்லூர் அருகே காளையனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கருங்கலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கொளத்தூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கொளத்தூர் போலீசார் கருங்கல்லூர் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கருங்கல்லூர் அருகே காளையனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயசு 45) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT