சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.