சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சரிந்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4,038 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,864 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 62.65 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 63.40 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 27.03 டி.எம்.சியாக உள்ளது.