ராசிபுரம்:
நாமக்கல்லில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஒரு பெண் உள்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். காரை ராமு என்பவர் ஓட்டி சென்றதாக தெரிகிறது.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில் அருகே சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 55 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். காரை ஓட்டிச் சென்ற ராமு உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களா? அல்லது தமிழகத்தைச் சேர்ந்த வர்களா என்று தெரிய வில்லை. விபத்தில் இறந்த பெண் உடல் பிரேத பரி சோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி யில் வைக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்கள் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள முடி யவில்லை. அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். வெண்ணந்தூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.