சேலம்:
சேலம் மூன்றாம் கரடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 27). கிச்சிபாளையத்தில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய இவரை கிச்சிபாளையம் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இதற்கு இடையே வழக்கு தொடர்பாக அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சேலம் கோர்ட்டு கடந்த 10 நாட்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர் .
இந்த நிலையில் நாகராஜன் நேற்று இரவு போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.