உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே மோட்டார்சைக்கிள் திருடிய முன்னாள் வருவாய் ஆய்வாளர் கைது

ஜெயமணி (வயது 47). இவர் சீரகபாடி யில் உள்ள தனியார் மருத்து வக் கல்லூரி யில் கேசியராக உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்த தில் எட்டு மாணிக்கம்பட்டியை சேர்ந்த அரவிந்த் (38) என்ப வர் இருசக்கர வாக னத்தை திருடியது தெரியவந்தது.

சேலம்:

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடி வாணியம்பாடியை சேர்ந்த வர் ஜெயமணி (வயது 47). இவர் சீரகபாடி யில் உள்ள தனியார் மருத்து வக் கல்லூரி யில் கேசியராக உள்ளார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 6-ந்தேதி இரவு கல்லூரியில் வாகனம் நிறுத்தம் இடத்தில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். மறுநாள் பார்த்தபோது வாகனம் மாயமானது. இதுபற்றி அவர் ஆட்டை யாம்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை பார்த்தபோது இவரது வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்த தில் எட்டு மாணிக்கம்பட்டியை சேர்ந்த அரவிந்த் (38) என்ப வர் இருசக்கர வாக னத்தை திருடியது தெரியவந்தது. அரவிந்த் திருவண்ணா மலை, நாமக்கல் மாவட்டங்க ளில் வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி யதும், பணியின்போது தொடர் குற்றச்சாட்டுகளின் பேரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப் பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்து இரு சக்கர வாகனத்தையும் பறி முதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT