தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் கணக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தகராறு தொடர்பாக இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் முருகன் (50), சிவன் (26), ரஞ்சித்குமார் (25), அனில்குமார் (27), சிவா (26), அன்பு (30), அரவிந்தன் (25), ராஜமுத்து (55) உட்பட 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.