உள்ளூர் செய்திகள்

ரூ.87 லட்சத்துக்கு ஆடு, மாடு விற்பனை

தலை வாசல் அருகே வீரகனூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது.ரூ.87 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

சேலம்:

சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே வீரகனூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெரம்பலூர், சின்னசேலம் பகுதிகளில் இருந்து 1000 ஆடுகள், 400 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

சேலம், நாமக்கல், திருச்சி மட்டுமின்றி கேரளா வியாபாரிகளும் பங்கேற்றனர். இதன் மூலம் ரூ. 60 லட்சத்துக்கு ஆடுகள், ரூ.27 லட்சத்துக்கு மாடுகள் என ரூ.87 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.