கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் 16-ந்தேதி சைமா மகாசபை கூட்டம்

ஆடை உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு மட்டுமே செயற்குழுவில் பதவி வழங்கவேண்டும்.

மாலை மலர்

திருப்பூர்:

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) மகாசபை கூட்டம் திருப்பூர் ஹார்வி ரோடு சிட்கோ வளாகத்தில் உள்ள சங்க அரங்கில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை வகிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவேண்டும். ஆடை உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு மட்டுமே செயற்குழுவில் பதவி வழங்கவேண்டும்.நிர்வாக பதவியில்  ஒருவர் 2 முறைக்கு மேல் பதவி வகிக்க கூடாது. இந்த ஷரத்துக்களை சங்க ‘பை-லா’வில் சேர்க்க வேண்டும் என ஒரு தரப்பினர் கடிதம் அளித்துள்ளனர்.