தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

திண்டுக்கல்லில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல ஆணை வழங்க வேண்டும். 

கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்டுள்ள அனைத்து உரிமை களையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையின் மீது பிற துறை பணிகளை திணிப்பதையும், 

கால அவகாசமின்றி திட்டப்பணிகளை முடிப்பதற்கு அளிக்கப்படும் கடுமையான நிர்பந்தங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகுடபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வீரகடம்பு கோபு, நிர்வாகிகள் சுகந்தி, ராஜமாணிக்கம், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.