கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் டைல்ஸ் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு

திண்டுக்கல்லில் பிரபல டைல்ஸ் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு நடந்தது

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்&பழனி சாலையில் நாகராஜ் (வயது28) என்பவருக்கு சொந்தமான பிரபல டைல்ஸ் கடை உள்ளது. இங்கு சம்பவத்தன்று இரவு  வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி சென்று விட்டனர்.

மீண்டும் காலையில் கடையை திறக்க வந்தபோது மேற்கூரையின் வழியே மர்ம நபர்கள் உள்ளே நுழைந்திருந்தது தெரிய வந்தது. உள்ளே நுழைந்த நபர் கடைக்குள் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. காமிராவை வேறு பக்கம் திருப்பி வைத்து விட்டு கல்லாவில் இருந்த ரூ.1.90 லட்சத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து நாகராஜ் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மக்கள் அதிகம் வசிக்கும் இடத்திலும் வாகன போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.