பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவுநீர் ஓடையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்த போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கழிவுநீர் ஓடை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

கழிவுநீர் ஓடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.23 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., உரியவர்களிடம் வழங்கினார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை தெரசா நகர் பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.15 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் ஓடையை அப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து, முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 23 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை உரியவர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க.., ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT