கைதான வழிப்பறி கொள்ளையர்கள். 
உள்ளூர் செய்திகள்

மாணவரிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் கைது

ஒட்டன்சத்திரத்தில் மாணவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் கார்த்திக்(வயது18). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று ரெயில்வே மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.  

அப்போது அவரிடம் வாலிபர் அவசரமாக தனது வீட்டுக்கு போன் செய்ய வேண்டும் என அவரது செல்போனை கேட்டுள்ளார்.   செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோதே கார்த்திக்கிடம்  கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க செயினையும் பறித்துக் கொண்டு மற்றொருவருடன் தப்பி ஓடினர்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்க டாஜலபதி தலைமையில் சப்&இன்ஸ் பெக்டர்கள் கவுசல்யா மற்றும் சரவணக் குமார் ஆகியோர் மாணவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளை யர்களை தேடினர்.

அவர்கள் ஒட்டன்சத் திரம் செக்போஸ்ட் பகுதியில் சுற்றித்திரிவது  தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்ததும் தப்பி ஓட முயன்றனர்.

இருந்தபோதும் அவர்களை பைக்கில் துரத்தி சென்ற போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தங்கச்சியம்மா பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் அஜித் (21), அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பகவதி(21) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து செயின் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.