கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

பொங்கலூர் பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை

அலகுமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட நிலையில் தற்போது கொடுவாய் துணை மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

திருப்பூர்:

பொங்கலூர் ஒன்றியம் தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் பகுதிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இருமுனை மின்சாரமாக மாற்றப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் கொடுவாய் அருகே புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. அலகுமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட நிலையில் தற்போது கொடுவாய் துணை மின் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

முன்போல மும்முனை மின்சாரம் வழங்காமல் இருமுனை மின்சாரம் வழங்கப்படுகிறது. காலை 10மணி  முதல் 1 மணி வரையும், இரவு 11:00 முதல் காலை 5:00 மணி வரையே மும்முனை மின்சாரம் கிடைக்கிறது.

இதனால் விவசாயிகள் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை. பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே மீண்டும் முன்னர்போல் இப்பகுதிக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.