உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. 
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்- எம்.எல்.ஏ. வழங்கினார்

எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.மின்விபத்தில் உயிரிழந்த அபிமணி தந்தை செல்வகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கல்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் அபிமணி (வயது 21).

சம்பவத்தன்று இவர் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக மின்சாரத் துறை சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மின்விபத்தில் உயிரிழந்த அபிமணி தந்தை செல்வகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பன்னீர்செல்வம் எம்.எல். ஏ. வழங்கினார்.

அப்பொழுது செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி, உதவி மின்பாதை பொறியாளர் ரங்கராஜன், சீர்காழி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரவேலு, பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT