உள்ளூர் செய்திகள்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்

விடையூர் பகுதியில் வேனில் கடத்தி வந்த ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். வேனில் இருந்த ஒருவரை போலீசார் கைது செய்து ரேசன் அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே விடையூர் பகுதியில் வேனில் கடத்தி வந்த ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து வேனில் இருந்த ஒருவரை போலீசார் கைது செய்து ரேசன் அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பொன்னேரி அருகே கிளிக்கொடி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் பின்புறம் கேட்பாரற்று கிடந்த ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.