கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

உப்பாறு அணையில் அரிய வகை பறவை

வடமாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப்படும்.

மாலை மலர்

திருப்பூர்:

வட மாநிலங்களில் வசிக்கும் அரிய வகை பறவையான பாடும் புதர் வானம்பாடி பறவை தாராபுரம் அருகே உப்பாறு அணையில் காணப்பட்டது. வடமாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப்படும். இந்த பறவை தமிழகத்தில் சேலம் மேட்டூர் பகுதியில் சில சமயங்களில் வருகை தந்துள்ளது. இதுகுறித்து பறவை ஆர்வலர்கள், அந்த பறவையை படம் பிடித்து பதிவு செய்துள்ளனர்.

அதே பறவை தாராபுரம் பகுதியில் உள்ள உப்பாறு அணையில்  தற்போது முதன் முறையாக காணப்படுகிறது. பறவை ஆர்வலர்கள் சதாசிவம், ரங்கநாதன் மற்றும் பூபாலன் ஆகியோர் அண்மையில் இந்த பறவையை உப்பாறு அணைப்பகுதியில் கண்டு பதிவு செய்துள்ளனர்.