உள்ளூர் செய்திகள்

ஆசிரியையை தாக்கிய வாலிபர் கைது

ஆபாசமாக பேசியதை தட்டி கேட்டதால் ஆத்திரம் போலீசார் விசாரணை

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த பூதேரி கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி பெண் ஆசிரியையை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் அத்திதாங்கல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 22) என்பவர் ஆபாசமாக பேசி உள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை தனது மகனுடன் சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் தகராறு முற்றி ஆசிரியை மற்றும் அவரது மகனை ராமகிருஷ் ணன் சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதுகுறித்து ஆசிரியை ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT