கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் பணிநீக்கம் எதிரோலியாக நடந்தது ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், விஜயசேகரன், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் மனோஜ் முனியன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதில் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT