உள்ளூர் செய்திகள்

தென்னிந்திய அளவிலான குங்பூ, கராத்தே போட்டி

பெங்களூரில் நடந்தது பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

கலவை:

பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குங்பூ மற்றும் கராத்தே போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு முதல் மற்றும் 2-ம் இடம் பெற்றனர்.

மாஸ்டர் கோட்டிஸ்வரன் தலைமையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ரோட்டரி தலைவர் பரத்குமார் ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபி மற்றும் கிரான்ட் மாஸ்டர் லீ ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.