உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

போலீசார் ஏற்றுக்கொண்டனர் குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.