சோளிங்கரில் அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் வளர்மதி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

12,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

அமைச்சர் தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாலை மலர்

சோளிங்கர்:

கருணாநிதி நூற் றாண்டு விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கூட் ரோடு அருகே நெடுஞ்சாலையோரம் 12000 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் டி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார், ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், துணைத்தலைவர் பூங்கொடி திட்ட ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு நெடுஞ்சாலையோரம் 12,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் ஒன்றிய கவுன்சி லர்கள் மாரிமுத்து, சந்திரன், ஒன்றிய செயலாளர் சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.