உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு நடந்தது வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

கலவை:

ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழாவையொட்டி கலவை ஆதிபராசக்தி வேளாாண்மை கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், விநாடி-வினா மற்றும் சொற்பொழிவு ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட வனபாதுகாவலர் சுஜாதா, வனசகர்கள் சரவணபாபு, ராஜா, வெங்கடேசன், பசுமை தோழர் ஏஞ்சலின், ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி முதல்வர் தனுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் காடுகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

SCROLL FOR NEXT