உள்ளூர் செய்திகள்

ஆண் பிணம் மீட்பு

தற்கொலையா? போலீசார் விசாரணை யார், எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி ஜங்ஷன் அருகே உள்ள பக்கிரிமலை பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர். மது அதிகமாக குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.