உள்ளூர் செய்திகள்

மின்சார கட்டணம் உயர்வு, வீட்டு வரியை ரத்து செய்ய வேண்டும்

த.மா.கா. சார்பாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம்:

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மின்சார உயர்வு மற்றும் வீட்டு வரி ரத்து செய்யக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி. அறிவுறுத்தலின் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் அரிதாஸ், தலைமையில் மனு வழங்கினர்.

இதில் அரக்கோணம் நகரத் தலைவர் கே.வி.ரவிச்சந்திரன், ஒன்றிய தலைவர் கே.எஸ்.ஆர்.கிரிராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் காந்தி ராஜ், வானம்பாடி தயாளன், காசிநாதன், ஒன்றிய செயலாளர் எல்.தேவேந்திரன், ராஜேஷ், கார்த்திகேயன், அம்மூர் சபாபதி, மூர்த்தி, சம்பந்தம், ஆனந்தபாபு, சரவணன், இளையராஜா, நாராயணன், அம்முர் கோபி, பாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் நகர ஒன்றிய போரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT