தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

ரூ.380 தினக் கூலியாக வழங்க வலியுறுத்தல் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

அரக்கோணம்:

அரக்கோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை, பல ஆண்டுகளாக பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக் கூலியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT