உள்ளூர் செய்திகள்

பஸ் படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த டிரைவர் மீது தாக்குதல்

சமூக வலை தளங்களில் வீடியோ காட்சிகள் பரவல் 11-ம் வகுப்பு மாணவரிடம் போலீசார் விசாரணை

மாலை மலர்

சோளிங்கர்:

சோளிங்கரிலிருந்து அரக்கோணத்திற்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ் பாண்டிய நல்லூர்போடப் பாறை அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றவாறு வந்தார்.

அவரை டிரைவர் பாலாஜி கண்டித்து உள்ளே வருமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் டிரைவர் பாலாஜியை தாக்கியதாக கூறப்படுகிறது.

அவருக்கு நெற்றிப்பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதை வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் பொதுமக்கள் வெளியிட்ட நிலையில், வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவரிடம் போலீசார் விசாரணை செய்ய உள்ளனர்.