உள்ளூர் செய்திகள்

அரக்கோணத்தில் தி.மு.க செயற்குழு கூட்டம்

பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

அரக்கோணம்:

அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் வி.என். உலகநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சருமான ஆர்.காந்தி, ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம..எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அரக்கோணம் ஒன்றிய தலைவர் நிர்மலா சௌந்தர், மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர்கள் வில்சன், அன்பழகன்,கீதா, நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, செயற்குழு உறுப்பினர் கண்ணையன், தக்கோலம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான எஸ்.நாகராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மத்திய ஒன்றிய பொருளாளர் ஜி.டில்லிபாபு நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT