உள்ளூர் செய்திகள்

ஐப்பசி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம்

வேடந்தாங்கல் சுப்ரமணிய சாமி கோவிலில் குவிந்தனர் பல்லக்கில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி, வள்ளி, தேவசேனா கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்ரமணியசுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

இதை தொடர்ந்து சுப்ரமணிய சாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்பு மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஒச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT