உள்ளூர் செய்திகள்

ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

பல்வேறு போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்ததுமாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாலை மலர்

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த வேலூர் பேட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதனையொட்டி பள்ளி மாணவ-மாண விகளுக்கு பல்வேறு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

வேலூர் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சஞ்சிவ் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மரம் நடுதலின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு, போக்சோ சட்டம், குழந்தை தொழிலாளர் தடை, குழந்தை திருமண தடை, அரசு நலத்திட்ட உதவிகள் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.