உள்ளூர் செய்திகள்

தண்டவாளம் அருகே வாலிபர் பிணம்

யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் - சித்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே காட்பாடி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பிணத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT