உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது

சோதனையில் சிக்கினர் போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட் டம், ஓச்சேரி அடுத்த பொய்கைநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் புகை யிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என அவளுர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையி லான போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது பொய்கை நல்லூர் ரோடு தெருவில் வசிக்கும் சீனிவாசன் (வயது 73) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT