உள்ளூர் செய்திகள்

காவேரிப்பாக்கம் அருகே லாரியில் பைக் மோதி விபத்து

வாலிபர் தலை துண்டாகி பலி 2 குழந்தைகளுக்கு பலத்த காயம்

நெமிலி:

காஞ்சிபுரம் மாவட்டம் ஆரிய பெரும்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த விஜய் பாபு (வயது 41). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாக கம்பெனியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவியும் முகேஷ் (13)என்ற மகன் சோபியா (9)என்ற மகள் உள்ளனர்.

விஜய்பாபு நேற்று பனப்பாக்கம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்ற வருகிறது.

இதற்கு ஜல்லி ஏற்றி சென்ற டிப்பர் லாரி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் பைக் வேகமாக மோதியது.

இதில் விஜய்பாபு தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மனைவி அனுசுயா மற்றும் 2 குழந்தைகள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மனைவி அனுசுயா மற்றும் சோபியா மேல் சிகிச்சைக்குசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

விஜய்பாபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.