விழாவில் சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  
உள்ளூர் செய்திகள்

உலக மனித உரிமைகள் தின விழா

கீழக்கரையில் உலக மனித உரிமைகள் தின விழா நடந்தது. பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து உலக மனித உரிமை தின விழாவை கீழக்கரையில் நடத்தியது.

மக்கள் நல பாதுகாப்புக் கழக தலைவர் தமீமுதீன் தலைமை தாங்கினார். சட்ட விழிப்புணர்வு இயக்க செயலாளர் தாஜுல் அமீன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ஷேக்இப்ராஹிம் சாதனையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

சட்ட விழிப்புணர்வு இயக்க தலைவரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான முஹம்மது சாலிஹ் ஹுசைன், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, தனியார் நிறு வனத்தின் இணை நிறுவனர் அப்துல் ரஹ்மான், ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம் ஆகி யோர் பேசினர். சட்டம் சம்பந்தமான பொது மக்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

சட்ட விழிப்புணர்வு இயக்க பொருளாளர் ஜாபீர் சுலைமான் நன்றி கூறினார். மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தொகுத்து வழங்கினார். இதில் 100-க்கும் அதிகமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.