உள்ளூர் செய்திகள்

எலும்பு கூடாக கிடந்த பெண் யார்?

தனுஷ்கோடி கடற்கரையில் எலும்புக்கூடாக கிடந்த பெண் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இது தொடர்பான உண்மை நிலையை அறிவதற்காக பெண் எலும்பு கூட்டை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் ஒரு மனித எலும்புக்கூடு கிடப்பதாக தனுஷ்கோடி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கிடந்த எலும்பு கூடை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த எலும்புக்கூடு ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்று தெரியவந்தது.

அந்த எலும்புக்கூடு எந்த பெண்ணின் எலும்புக்கூடு? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண் எப்படி இறந்தார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பான உண்மை நிலையை அறிவதற்காக பெண் எலும்பு கூட்டை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த பெண்கள் யாரேனும் மாயமாகி உள்ளார்களா? யாரேனும் கடலில் குளித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT