முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்தில் பிரபக்களூர் ஊராட்சியின் உழைப்பாளர் தின சிறப்பு கிராம சபைக்கூட்டம் முத்து விஜயபுரம் கிராமத்தில் நடந்தது.
பிரதமரின் கவுரவ நிதிஉதவி பெரும் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்காக விவசாயி கடன் அட்டை வழங்குவதற்குரிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் உரிய வங்கிகளில் கொண்டு சென்று சேர்ப்பதற்காக பெறப்பட்டது.
ராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பாஸ்கரமணியன், கிசான் கடன் அட்டையின் பயன்களை பற்றி கூறினார்.
பிரபக்களூர் ஊராட்சிக்குட்பட்ட விவசாயப் பயனாளிகளுக்கு கைத்தெளிப்பான் மற்றும் பருத்தி நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்பட்டன.
சென்ற ஆண்டில் பிரபக்களூர் ஊராட்சியில் வேளாண்மைத் துறை மூலம் பல்வேறு திட்டங்களில் பயன் பெற்ற விவசாயப் பயனாளிகள் பட்டியல் கிராம சபையின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் உடனிருந்தார்.