உள்ளூர் செய்திகள்

கமுதி நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் விழா

கமுதி நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி நெடுஞ்சாலையில் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, கமுதி நெடுஞ்சாலை பகுதிகளில், நெடுஞ்சாலைதுறை சார்பில் உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பார்த்திபன், சாலை ஆய்வாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT