சுற்றுலா படகு 
உள்ளூர் செய்திகள்

குருசடைத்தீவுக்கு விரைவில் சுற்றுலா படகுகள் இயக்கம்

குருசடைத்தீவுக்கு விரைவில் சுற்றுலா படகுகள் இயக்கப்படும் என்று வன உயிரின காப்பாளர் தெரிவித்தார்.

மாலை மலர்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பகுதியில் சூழல் சுற்றுலா செயல்படுத்தப்பட்டு வருகிறது. காரங்காடு, பிச்சைமூப்பன் வலசை ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் படகு  போக்குவரத்து, பவளப்பாறைகளை பார்வையிடுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளில் குருசடை தீவானது சூழல் சுற்றுலாவுக்குரிய தளமாக உள்ளது. அங்கு சுற்றுலா  பயணிகளை அழைத்து  செல்வதற்காக படகுகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்காக சுற்றுலாத்துறை மூலம் படகுகள் வாங்கப்பட உள்ளன. படகுகளை இயக்கவும், சுற்றுலா  பயணிகளை பாதுகாப்பாக அழைத்து செல்லவும் மீனவர்கள் 15 பேருக்கு சிறப்பு பயிற்சிகள் தற்போது அளிக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு அவர் கூறினார்.