கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி கரந்தம்மாள் (வயது 52). பால் வியாபாரியான இவர், நேற்று முன் தினம் மாலை வியாபாரம் முடிந்து சிவகாமிபுரம்-பெரியகாடு பகுதியில் நடந்துசென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் நீண்ட வாளை எடுத்து காட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். தன்னிடம் பணமில்லை என்று கரந்தம்மாள் கூறினார்.இதையடுத்து கரந்தம்மாள் தலையில் வாளால் அவரை வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
அப்போது அங்கு நடந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த விக்ரம்குமார் என்பவரையும் அந்த கும்பல் வாளால் வெட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது. இச்சம்பவத்தில் கரந்தம்மாளுக்கு தலையில் 6 இடங்கள், விக்ரம் குமாருக்கு தலையில் 8 இடங்களில் வெட்டு விழுந்தது.
இது தொடர்பாக கீழக்கரை போலீசில் கரந்தம்மாள் புகார் அளித்தார். டி,எஸ்.பி, சுபாஷ் அறிவுறுத்தல்படி கீழக்கரை நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை புது கிழக்கு தெரு சீனி முஹமது மகன் (எ) முஹமது (30) , தட்டான்தோப்பு குணசேகரன் விஜய் (22), பிச்சை மகன் சஞ்சை நாதன் (20) , கிழக்கு நாடார் தெரு சங்கர் காந்தி மகன் அருண் (21) ஆகியோர் வாளால் வெட்டி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேைரயும் போலீசார் கைது செய்தது.