உள்ளூர் செய்திகள்

அப்துல் கலாம் பள்ளி மாணவர்கள் யோகாசன போட்டியில் வெற்றி

பரமக்குடி அப்துல் கலாம் பள்ளி மாணவர்கள் யோகாசன போட்டியில் வெற்றி பெற்றனர். சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.

பரமக்குடி

பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்னவ்(கடல்) யோகா மையம் மூலம் நடத்தப்பட்ட மண்டல அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் அனைத்து மாணவர்களும் திறமையை வெளிப்படுத்தி 9 பேர் முதல் பரிசும், 30-க்கும் மேற்பட்டோர் 2-ம் பரிசும், 10-க்கும் மேற்பட்டோர் 3-வது பரிசும் பெற்றனர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கமலக்கண்ணன், மணிகண்டன் ஆகியோரையும், பரிசு பெற்ற மாணவர்களையும் பள்ளி சேர்மன் முகைதீன் முசாபர் அலி, முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT