மேலாண்மைகுழு உறுப்பினர் தேர்வு. 
உள்ளூர் செய்திகள்

மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.

மாலை மலர்

ராமநாதபுரம்

தமிழகத்தில் முதல் வகுப்பு தொடங்கி 8ம் வகுப்பு வரைஉள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை தேர்வு செய்வதற்கான கூட்டங்கள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 156 பள்ளிகளில் மேலாண்மைகுழு தேர்வுக்கான கூட்டங்கள் நடைபெற்றன. 

நகராட்சிகளில் 6பள்ளிகள், பேரூராட்சிகளில் 4பள்ளிகள், ஊராட்சிகளில் 146பள்ளிகள் இடம் பெற் றிருந்தன. ஒவ்வொரு பள்ளி குழுவிலும் அந்தந்த பகுதி உள்ளாட்சி உறுப்பினர்கள் 2பேர் ஏற்கனவே ஆட்சியர் மூலம் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தனர். 

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப் பினர்களாக அறிவிக்கப் பட்டனர். அதேபோல் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் மற்றும் இல்லந்தேடி கல்வித்திட்ட தன்னார்வலர் ஒருவர் என 5பேர் தேர்வாகியிருந்தனர். தலைவர், துணைத்தலைவர் களாக அந்தந்த பள்ளியில் பயிலும் மாணவ&மாணவிகளின் தந்தை அல்லது தாய் மற்றும் உறுப்பினர்கள் என மொத்தம் 15பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

குழுவில் 50சதவீதம் பேர் பெண்களாகவும் இடம் பெற்றுள்ளனர். ராமநாதபுரம் நகராட்சியில் அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளி மற்றும் வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் மேலாண்மை குழுக்கள் தேர்வு நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் எதிரே யுள்ள அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மேலாண்மை குழு  தேர்வுக்கு நகரசபை தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார். 

கூட்டத்தை ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் தொடக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் ரமேஷ், வட்டார  கல்வி அலுவலர் ராமநாதன் ஆகியோர் தேர்வை நடத்தி னர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி தலைமைஆசிரியர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.