உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது நிறுவனர் சபரிமலைநாதன்,சமூக ஆர்வலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் முத்தமிழ் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. காக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் செந்தில்குமாரின் தாயார் புற்று நோயால் காலமானார். அவரது 60-வது நினைவு நாளை முன்னிட்டு இந்த அறக்கட்டளை மூலம் முதுகுளத்தூரில்

30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன்,சமூக ஆர்வலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.