கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

வட்டார அளவிலான கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

கீழக்கரை

திருப்புல்லாணி வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6-வது முதல் 8-வது வகுப்பு மாணவர்கள், 9-வது முதல் 10-வது வகுப்பு மாணவர்கள், 11-வது முதல் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு என தனி பிரிவாக ஓவியம், பேச்சுப்போட்டி, மொழித்தி றன், இசைக்கருவி, நடனம், பாட்டு, நாடகம், பட்டி மன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் கர்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் தொகுத்து வழங்கினார்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். திருப்புல்லா ணி ஒன்றியத்தில் 20 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், தலைமயாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசாக கேடயம் மற்றும் சான்றிதழ் ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி, ஊராட்சி மன்றத்தலைவர் கஜேந்திர மாலா ஆகியோர் வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டி யராசு, செந்தில்கு மார், ரமேஷ், செல்வகுமார், சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்தார்.

SCROLL FOR NEXT