ராமநாதபுரம்
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் அஞ்சலகக் கோட்ட கண் காணிப்பாளர் அலுவலகம்முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். சங்கத்தலைவர் முனியசாமி, கோட்ட பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பணி நேரங்களில் இணையதள பிரச்சினையால் பணிகளை முடிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, இந்த பிரச்சினையை சீர்படுத்த வேண்டும். வேலைப்பளுவை குறைக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணி இடமாறுதலில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.