அலுவலகம் 
உள்ளூர் செய்திகள்

புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்

முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாயல்குடி

முதுகுளத்தூர் தொகுதியில் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதியில் 155 ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் கடைக்கோடி மக்கள் அதிக தொலைவிலுள்ள பரமக்கு டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவல கத்திற்கு சென்று வந்தனர்.

எனவே முதுகுளத்தூர் தொகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலு வலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இக்கோரிக்கைக்கு அமைச்சரும், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜகண்ணப்பன் தீவிர கவனம் ெசலுத்தி அத ற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.இதுதொடர்பாக அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று நடந்து முடிந்த சட்டமன்ற கூட்ட த்தொடரில் போக்குவரத்து மானியக் கோரிக்கையில் முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து முதுகுளத்தூ ரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்கும் பணிகள் தீவிர ப்படுத்தப்பட்டு உள்ளன.

பொதுமக்களின் பல ஆண்டு கோரி க்கையை முயற்சி எடுத்துநிறை வேற்றிய அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு தொகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்

SCROLL FOR NEXT