உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.

பரமக்குடி தொகுதியில் நலத்திட்ட பணிகளை முருகேசன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார். எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையையும் திறந்து வைத்தார்.

பரமக்குடி

பரமக்குடி நகராட்சி சார்பாக 17-வது வார்டு கொல்லம்பட்டறை தெருவில் போர்வெல் அமைக்கும் பணியினை நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகராட்சி பொறியாளர் மீரானலி, உதவி பொறியாளர் சுரேஷ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், சுகன்யா, கவிதா, துர்கா, வசந்த கல்யாணி, நகர துணைச் செயலாளர் வேலன், தெற்கு நகர் பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் போகலூர் ஒன்றியம் குமுக்கோட்டை ஊராட்சி பூவிளத்தூரில் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஒன்றிய செய லாளர்கள் குணசேகரன் (மேற்கு), கதிரவன்(கிழக்கு), ஒன்றியக் குழு துணை தலைவர் பூமிநாதன், போகலூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.